'சொந்த கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க என்ன படை அமைக்கப் போறீங்க'...? - முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி...! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தவெக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் மீது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடன் பெற்றுத் தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தி, பல பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு, அவர்களின் தனியுரிமையை மீறும் வகையில் காணொளிகள் பதிவு செய்து அச்சுறுத்தியதாகவும், அந்த பெண்களை மேலும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கி ஆதரவளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தும் அரசு, தனது கட்சியைச் சேர்ந்தவர்கள்மீது எழும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

“மாற்று அரசியல்” என்ற முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்புடைய பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வெளிவருவது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் அடையாளம் பாதுகாப்புக் கவசமாக மாறக்கூடாது என்றும், சமூக நலனுக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்; இல்லையெனில் எதிர்காலத்தில் தமிழகம் கடுமையான சமூகச் சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What kind force you going form protect women from your own party executives BJP leader Nainar Nagendran questions Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->