திடீர் திருப்பம்: தமிழகம், கேரளாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!
IMD Report 13 to 18 dec 2024
வரும் 16 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அது தற்போது 15 ஆம் தேதியே உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
மேல் காற்று சூழல் 14-ஆம் தேதி தென் அந்தமான் கடல் பகுதியில் உருவாகி, 15-ஆம் தேதி கீழே நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு மிகப்பெரிய மழை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று 13 ஆம் தேதி ரெட் அலெர்ட்,
14 ஆம் தேதி மஞ்சள் அலெர்ட்
16 ஆம் தேதி மஞ்சள் அலெர்ட்
17 ஆம் தேதி ஆரஞ்சு அலெர்ட்
18 ஆம் தேதி மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளா மாநிலத்தில் 13 மற்றும் 17,18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசம்: 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
English Summary
IMD Report 13 to 18 dec 2024