தமிழகத்தை நெருங்கும் இரண்டு புயல் சின்னங்கள்: குமரிக்கடலில் தாழ்வுப் பகுதி – சென்னைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!
IMD low pressure area formed Bay of Bengal
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அதே சமயம், ஏற்கெனவே அந்தமான் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை:
தமிழகத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், சில மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
மஞ்சள் எச்சரிக்கை
நவ. 25 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்
நவ. 26 தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்
சென்னை மற்றும் புயல் அபாயம்
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று (நவ. 25) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நவம்பர் 29-ஆம் தேதி சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்யார் புயல்: அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 நாட்களில் 'சென்யார்' புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IMD low pressure area formed Bay of Bengal