கள்ளக்காதல் மோகம்..கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர்  முன்னாள் ராணுவ வீரர்தேவேந்திரகுமார்.இவரது மனைவி மாயா தேவி.திடீரென மாயமான தேவேந்திர குமார் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில்  கைகளும், கால்களும் வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து  2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் தேவேந்திர குமார் உடல் கண்டு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி  வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illicit love obsession the wife who cut her husband into pieces


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->