திண்டுக்கல்லில் பரபரப்பு.! காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் காதலனை பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலில் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கண்ணுமேய்க்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் மகேஸ்வரி(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து முத்துக்குமார், மகேஸ்வரிடமிருந்து பணம் மற்றும் நகைகள் வாங்கி இருந்த நிலையில், மகேஸ்வரி முத்துக்குமாரிடம் நகை, பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் முத்துக்குமார் அதனை கொடுக்க மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று தவசிபட்டி செல்லும் காட்டுப் பகுதியில் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்பொழுது இருவருடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மகேஸ்வரி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை முத்துக்குமார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஸ்வரி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal girlfriend who burnt her lover by pouring petrol in Dindigul


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->