கோடை விடுமுறையில் எங்க சுற்றுலா செல்லலாம் என்று யோசனையில் இருக்கிறீர்களா.? உங்களுக்கான பதிவு தான் இது.! - Seithipunal
Seithipunal


கோடை விடுமுறையும் வந்து விட்டது  பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்  தேர்வு முடிவுகளைப் பற்றிய பதட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கோடை விடுமுறை என்றாலே எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றுவர ரம்யமான ஒரு இடம் என்றால் தமிழ்நாட்டில் அது நிலாவூர் ஏரி.

வேலூரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவிலும் ஏலகிரியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள நிலாவூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த ஏரி.

குதூகலமான படகு சவாரியுடன் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த ஏரியா ஆனது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு இருக்கும் கிராமத்து மண்வாசமும் ரம்மியமான சூழலும் மனதை மயக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த ஏரியின் அருகே மோட்ச விமோசன ஆலயமும், தம்புரான் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை சுற்றிலும்  நிலவும் அமைதியான சூழல் மனதிற்கு  அமைதியை தருவதோடு கண்டிப்பாக புத்துணர்ச்சியையும் தரும். நீங்கள் ஒரு முறை சென்று வந்தால் மீண்டும் வரத் தூண்டும் வகையில் இந்த ஏரியின் அழகு அமைந்திருக்கும்.

இந்த ஏரியை சுற்றிச் செல்ல வழிகாட்டிகள் நிறைய பேர் இருப்பார்கள் மேலும் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலம்  இங்கு சுற்றுலா செல்வதற்கே உகந்த காலமாகும். இந்த ஏரிக்கு செல்வதற்கு ஏலகிரியிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் இருக்கின்றன. மேலும் ஏலகிரியில் ஏராளமான தங்கும் விடுதிகளும் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you are thinking of where to go on a summer vacation this is the post for you


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->