விஜய் இன்னும் 3 மாநாடு நடத்தினால் போதும்.. விஜய் காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார்.. விஜயை கலாய்த்த சேகர்பாபு!
If Vijay holds 3 more conferences he will become a big pot Sekarbabu made fun of Vijay
சென்னை:தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து நடத்தி வரும் மாநாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில், விஜய் 234 தொகுதிகளிலும் தனது முகத்திற்காக வாக்கு கேட்டு, திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை, ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம், தேர்தல் ஆணைய குற்றச்சாட்டு போன்ற மக்கள் வாழ்வுடன் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து விஜய் எதையும் பேசவில்லை. வழக்கம்போல் வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பழைய விஷயங்களையே எடுத்துக்கொண்டார். மேலும், முதல்வர் ஸ்டாலினை “அங்கிள்” என்று அழைத்தது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இதற்கு தொடர்ந்து அமைச்சர்கள் விமர்சன களத்தில் குதித்துள்ளனர். அதில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து,“விஜய் இதுவரை இரண்டு மாநாடுகள் நடத்திவிட்டார். அதிலேயே நரியின் சாயம் வெளுத்து போய்விட்டது. ராஜா வேஷம் கலைந்து விட்டது. இன்னும் இரண்டு, மூன்று மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார்”
என்று கிண்டல் செய்தார்.
மேலும் அவர்,“முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று அழைப்பதன் மூலம், விஜயின் உயரம் எவ்வளவு என்பதை மக்கள் அறிந்துவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. விஜயின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களுக்கு எங்களிடம் நேரமில்லை. 2026 தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை முதல்வர் ஸ்டாலினின் கைகளில் ஒப்படைப்போம்”
என்று உறுதியாக தெரிவித்தார்.
விஜயின் மாநாடுகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படும் நிலையில், திமுக அமைச்சர்களின் தொடர் விமர்சனங்களால், தமிழக அரசியல் சூடுபிடித்து வருகிறது.
English Summary
If Vijay holds 3 more conferences he will become a big pot Sekarbabu made fun of Vijay