24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்.. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு! 
                                    
                                    
                                   I will keep the Tasmac open for 24 hours said the former MLA of DMK
 
                                 
                               
                                
                                      
                                            எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் இயங்கட்டும் என்று சொல்வேன் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி கூறினார்.
பம்மல் அருகே தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி  பேசியதாவது:-நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடையை முதலில் மூடுவோம் என்று சொன்னால் ஒட்டுமொத்த பேரும் எங்களுக்கு ஓட்டுப்போடுவாங்கன்னு.ஆனா, குடிக்கிறவங்கள் எல்லாம் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கினதே டாஸ்மாக்கில் தான். சேல்ஸ் மேனும், சூப்பர்வைசரும் தான் தேர்தல் பிரசாரக் கருவி. 
சாப்பாடுக்கூட இல்லாமல் இருப்போம் சரக்கு இல்லன்னா எப்படின்னு யோசனை பண்ணி இவங்க ஆட்சிக்கு வந்து கடையெல்லாம் மூடிட்டா என்ன பண்றதுன்னு சொல்லி குடிக்கிறவங்களா சேர்ந்து ஓட்டு மாற்றிபோட்டதால் தான் நாங்க ஆட்சியை விட்டுப்போனோம்.இந்த தேர்தலில் நிறைய பேர் கேட்டாங்க, மூடுவிங்களா?ன்னு நாங்க வாயே மூடிட்டோம். ஏதாவது அபிப்ராயம் உண்டா என்றான். வாயைத்திறக்கவில்லை.
இப்போ சொல்றேன் ,இது நெல்லிக்குப்பம் புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் இயங்கட்டும். யாருக்கும் வஞ்சனை இல்ல. குடிக்கிறவன் தான் குடிக்கப்போவான். எதுக்கு டாஸ்மாக் கடை 24 மணிநேரமும் திறக்கணும் சொல்கிறேன் என்றால்... குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை. அவனா திருந்தின்னாதான் உண்டே தவிர வேற யாராலயும் அவனை திருத்த முடியாது. இது என்னுடைய கருத்து என பேசினார். 
 
                                     
                                 
                   
                       English Summary
                       I will keep the Tasmac open for 24 hours said the former MLA of DMK