ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன்..புதிதாக பதவியேற்ற வேலூர் டிஐஜி தர்மராஜன் உறுதி!
I will completely eliminate rowdyism The newly appointed Vellore DIG Dharmarajan assures
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் சரக புதிய டிஐஜி யாக பதவியேற்றுள்ள தர்மராஜன் பதவி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இன்று வேலூர் சரக டிஐஜி யாக தர்மராஜன் பதவி ஏற்றுக்கொண்டார் இதனை அடுத்து அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

நான்கு மாவட்டத்திலும் ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் மேலும் நான்கு மாவட்டத்திலும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் அதே போல் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் காவலர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,
நான்கு மாவட்டத்திலும் ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உடனடியாக அவர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனபுதிதாக பதிவேற்றுக்கொண்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் அதிரடி பேட்டியளித்தார்.
English Summary
I will completely eliminate rowdyism The newly appointed Vellore DIG Dharmarajan assures