நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறேன் - தமிழக பாஜக தலைவர் ...! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை  'நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழர் மரபுக்கும், தமிழர் மாண்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி, தமிழர் வாழ்வியல் முறையை திராவிட மாடலாக ஆக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் எந்த தமிழர் பண்டிகைக்கும் வாழ்த்து கூற மாட்டேன். ஆனால், வேற்று தேசத்தில் இருந்து வந்த மதங்களை கண்டு பயந்து, நயந்து, பணிந்து நடப்பேன். இது தான் தமிழருக்கு எதிரான என் திராவிட மாடல்' என்று செய்து காட்டுவதாக உள்ளது .

இந்த அரசை, ஆட்சியில் அமர்த்திய மக்களும், அவர்களின் ஆட்டத்தை பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். 'மக்கள் சக்தியே மகேசன் சக்தி' ஆக மாற்றி காட்டும் நல்லநாள் மிக தொலைவில் இல்லை.

அந்த மாற்றத்திற்கான ஒரு விதையாக இந்த தீர்ப்பு வந்துள்ளது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீதிமன்ற தீர்ப்பு. ஆகம விதிகளின் கட்டப்பட்ட கோவில் அல்லது கோவில்களின் குழுக்களில் தெய்வ வழிபாடு மட்டுமின்றி, அர்ச்சகர்கள் நியமனம் உட்பட, அனைத்தும் வழக்கமாகவும் மற்றும் நடைமுறையாகவும் ஆகம விதிப்படி நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஓராண்டாக நடந்து வந்த அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பு மிக துல்லியமானது. அதில், 'அர்ச்சகர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு விதித்த விதிகள் செல்லும், இருந்தாலும், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில், அந்த ஆகம விதிப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நம் தமிழர் மரபுக்கும், தமிழர் மாண்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழர் வாழ்வியல் முறையை திராவிட மாடலாக ஆக்க முடியாது என்று தீர்ப்பு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறேன்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I bow down and welcome the court's verdict- Tamil Nadu BJP leader ...!


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->