#திண்டுக்கல் || மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கணவர்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி லக்கான் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி கற்பகம்(வயது30). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கருப்பு சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அதனை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் கோவிலுக்கு சென்று கயிறு கட்டி வந்த கருப்புசாமி, நேற்று இரவு மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த மனைவி கற்பகம், கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கணவன்-மனைவியே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கருப்புசாமி கத்திரிக்கோலால் மனைவியின் கழுத்தில் தாறுமாறாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடமதுரை காவல்துறையினர், கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொடூரமாக கொலை செய்த கருப்புசாமியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband stabs wife to death with scissors in Dindigul


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->