கொலையில் முடிந்த வாக்குவாதம்.. உருட்டு கட்டையால் மனைவியை கொலை செய்த கணவன்..!
Husband Kill His Wife Near Thiruppaththur
மனைவியை அடித்துக் கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் , பெரும் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் இவருக்கு திருமணமாகி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். காளியப்பன் கோயம்புத்தூரில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காளியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கோயம்புத்தூரில் இருந்து இரவு ஊருக்கு வந்த காளியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வீட்டிலிருந்த உருட்டுக்கட்டையால் மனைவியை அடித்து உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரின் குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வரி தாயின் அளித்த புகாரின் அடிப்படையில் காளியப்பனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Husband Kill His Wife Near Thiruppaththur