குடிநீர் தொட்டியில் மனித கழிவு - மதுரை அருகே பரபரப்பு.!!
human wastage mixed in drinking water tank un madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமைச்சியாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து வந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த குடிநீரை குடித்தவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பதாக புகார் தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் மற்றும் பணியாளர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கிருமிநாசினி பவுடர் தெளித்தனர். இருபினும், கிராம மக்கள் துர்நாற்றம் வருகிறது, இந்த குடிநீரை நாங்கள் பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேல்நிலை தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறும்போது, குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுசம்பந்தமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
human wastage mixed in drinking water tank un madurai