அஜாக்கிரதையாக விடப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்காலில், தாய் - மகள் விழுந்து பலியான சம்பவம்.. மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனப்பாக்கம் பகுதியை சார்ந்த பெண்மணி கல்லூரி பேராசிரியை மற்றும் கண் மருத்துவர் கரோலின் பிரமிளா (வயது 50). இவரது மகள் எபிலின் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

நேற்று, இவர்கள் இருவரும் இருசக்கர வாகனம் மூலமாக நொளம்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழிசாலையில் சென்று கொண்டு இருந்துள்ளனர். இந்த சாலையை ஒட்டியவாறு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது மூடப்படாமல் இருந்துள்ளது. 

தாய் - மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்கையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட நினைத்து இருவரும் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளது. இருவரின் தலையிலும் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி துடித்த நிலையில், வாகன ஓட்டிகள் நீண்ட நேரத்திற்கு பின்னர் வாகனம் மட்டும் தனியாக கீழே சாலையோரமாக விழுந்திருப்பதை கண்டு வாய்களில் பார்த்துள்ளனர். 

இதன்போது தாய் - மகள் இருவரும் பரிதாபமாக பலியானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சென்னை மாநகர ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்கவும் சம்பன் வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human Rights Sampan to Daughter and Mother Death Rainwater drainage Line


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal