நெல்லை விசாரணை கைதி மீது கொடூர தாக்குதல்! போலீசாருக்கு ரூ.4 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் அதிரடி!
Human Rights Commission Nellai police Attack Fine
நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேலை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் சந்திரா 2019ஆம் ஆண்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், நெல்லை டவுன் காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பேச்சிவேலை தேடி வந்த போலீசார் மளிகைக் கடையில் நுழைந்து பொருட்கள் சேதப்படுத்தியதால் ரூ.10,000 இழப்பு ஏற்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் போலீசாருக்கு எதிராக தவறு ஏதும் இல்லை என்று காவல்துறை ஆணையர் விசாரணை அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பேச்சிவேல் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருப்பதை முன்னிறுத்தி, அவர் விழுந்து காயம் அடைந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு புகாரைத் தள்ளுபடி செய்ய முயற்சி நடந்தது.
ஆனாலும், விசாரணையின் போது பேச்சிவேல் மீது சிலிண்டர் தொங்கவைத்து கடுமையாக கொடுமை செய்யப்பட்ட தகவலை போலீசார் மறைத்தது தெரியவந்தது. கைது தேதி மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய விவரங்களையும் காவல்துறை மறைத்ததை மனித உரிமை ஆணையம் கண்டித்தது.
இதையடுத்து, போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க, மேலும் விமலன் மற்றும் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Human Rights Commission Nellai police Attack Fine