பெட்ரோல் குண்டு வீசுவது எப்படி? வீடியோ வெளியிட்டவரை தட்டி தூக்கிய போலீஸ்! மேலும் ஒருவர் தலைமறைவு! - Seithipunal
Seithipunal


தென்காசி | மாவட்ட ஆட்சியரிடம் போட்டுக் கொடுத்த பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இன்னிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலகல் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் பால் வியாபாரியாக வேலை செய்யும் அஜித்குமார் என்பவர், பெட்ரோல் குண்டை தயார் செய்து அதை பொதுவெளியில் வெடிக்கச் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்க்கும் அனுப்பி வைத்துள்ளனர். 

 அதன் அடிப்படையில் சங்கரன்கோயில் தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அஜித் குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை தேடி வந்தனர். இதில் அஜித் குமார் மட்டும் பிடிபட்டுள்ளார். அவர் மீது பொது சொத்துகளுக்கு பங்கம் ஏற்படுத்துதல், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எரிபொருளை கையாளுதல் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடி வருகின்றனர்.

தமிழக முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்வக்கோளாறாக இது போன்ற பெட்ரோல் குண்டு வீசும் காணொளிகளை எடுத்து பதிவு செய்த அஜித்குமார் தற்பொழுது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to throw a petrol bomb Police knocked down the person who published the video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->