ஆதார் கார்டு புதிய வடிவத்தில்! எங்கு? எப்படி பெறுவது?! ஆதார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தற்போது பயன்படுத்தும் ஆதார் அட்டைக்கு பதிலாக, அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கட்டணம் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை மூலம் வாக்களிப்பது, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கிழியாமல், ஈரம் படாமலும், பத்திரமாக வைத்துக்கொள்ள பலரும் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது இந்த ஆதார் அட்டைக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் அட்டை நம்முடைய சாதாரண ஏடிஎம் கார்டு போல இருக்கும்.

இந்த புதிய ஆதார் அட்டையை ஏடிஎம் கார்டு வைத்துக் கொள்வது போல், நான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்தால், அந்நிறுவனம் நமது வீட்டுக்கு ஐந்து நாட்களில் அனுப்பி வைத்துவிடும்.

ஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், மை ஆதார் என்ற பகுதிக்கு சென்று 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் அட்டையின் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதன்பின் அன்று முதல் ஐந்து நாட்களில் உங்கள் புதிய பிவிசி ஆதார் அட்டை, ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to get pvc plastic aadhar card


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal