40 பயனாளர்களுக்கு வீடு வழங்கல்.. சாவிகளை ஒப்படைத்த MLA இராசேந்திரன்!
Housing provision for 40 beneficiaries MLA Rajendran handed over the keys
கடலூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 40 பயனாளர்களுக்கு வீடுகள் வழங்குதல் மற்றும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன், கலந்துகொண்டு, பயனாளர்களுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மு க ஸ்டாலின், ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆலோசனைப்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழகுப்பம் ஊராட்சி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 40 பயனாளர்களுக்கு வீடுகள் வழங்குதல் மற்றும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன், கலந்துகொண்டு, பயனாளர்களுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், பொறியாளர் பாலமுரளி , உதவி பொறியாளர் கனகராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆனந்த், வர்த்தக அணி துணை அமைப்பாளர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருள் முருகன் மேலிருப்பு அன்பழகன், ரகுபதி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ராமதாஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், அன்பழகன் கீழக்குப்பம் பகுதியை சேர்ந்த அன்பழகன், ஜெயக்குமார், கணபதி, அன்பு, கருணாநிதி, பாவாடைத் துறை ஆறுமுகம், ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, குபேர், தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சி, நெய்வேலி பகுதி மக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.
English Summary
Housing provision for 40 beneficiaries MLA Rajendran handed over the keys