புதுக்கோட்டை || நள்ளிரவில் இடிந்து விழுந்த வீடு - குடும்பத்தினரின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், ஆவுடையார் கோவில் அருகே இளம்பாவயல் கிராம பகுதியில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர் மழையால் நேற்று இரவு திடீரென இடிந்து விழத்தொடங்கியது. இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட பழனிகுமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறினர். 

சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது. இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இல்லாமல் தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

house collapse in puthukottai aranthangi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->