சோழிங்கநல்லூரில் பயங்கரம்...! பெற்ற பச்சிளம் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்ற கல்நெஞ்சக்காரத் தாய்...! அடுத்து நடந்தது என்ன...?
Horror Sholinganallur heartless mother threw her newborn baby toilet What happened next
பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பொதுக் கழிவறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் பர்வீனா (65), கழிவறைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தன்னுடன் பணியாற்றிய பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜீவா மற்றும் செம்மஞ்சேரியை சேர்ந்த காமாட்சியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன் செம்மஞ்சேரி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று, தூய்மை பணியாளர்களின் உதவியுடன் உயிர் துடித்துக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து காவலர்கள் தாமதமின்றி குழந்தையை காவலர் வாகனத்தில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர முதலுதவி அளித்து உயிர் காப்பாற்றினர்.
பின்னர் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புடன் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை காவலர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த பச்சிளம் குழந்தையை கழிவறையில் விட்டுச் சென்ற பெண் யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து செம்மஞ்சேரி காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Horror Sholinganallur heartless mother threw her newborn baby toilet What happened next