கடலூரில் பயங்கரம்: கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய வீடு...! - இடிபாடுகளில் சிக்கி பெண் படுகாயம்!
Horror Cuddalore House destroyed by gas cylinder explosion Woman seriously injured after being trapped rubble
கடலூர் மாவட்டம் வடலூர் ஆசிரியர் நகர் பகுதியில் நேற்று நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடனசபாபதி முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் முகமது ரபிக் (55) என்பவர் இரும்பு கம்பி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது மனைவி சாராபீவி (48), காலை நேரத்தில் வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவு பெரும் வெடிப்பாக மாறி வீட்டு ஒரு பகுதி சிதறி இடிந்து விழுந்தது.

கண நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டத்தில் மூழ்கியதால் பரபரப்பு நிலவியது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், வீட்டுக்குள் இருந்த மூன்று சிலிண்டர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.இடிபாடுகளுக்குள் சிக்கிய சாராபீவி பலத்த காயங்களுடன் உயிர்ப்பாயில் தவித்த நிலையில், அவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து வடலூர் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் வெடிப்பால் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சி மற்றும் அச்ச சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Horror Cuddalore House destroyed by gas cylinder explosion Woman seriously injured after being trapped rubble