பயங்கர தீவிபத்து: 29 மாணவர்கள் பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பாங்கியில் அமைந்துள்ள ஒரு உயர் நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 280 பேர் படுகாயமடைந்தனர்.

5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வந்தன. தேர்வின்போது திடீரென பயங்கர குண்டு வெடிப்பதை போல ஒரு சத்தம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அங்குமிங்குமாக ஓடி பரபரப்பான நிலை ஏற்பட்டது.

விரைவில் பள்ளி கட்டிடம் முழுவதும் தீப்பற்றிக் கொளுத்தி எரிய தொடங்கியது. புகைமண்டலமாக மாறிய அந்த இடத்தில், மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தில் பல மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் தீவிர நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அது திடீரென வெடித்து தீ விபத்துக்கு காரணமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டூடேரா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific fire disaster 29 students have died a tragedy


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->