அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வெங்கட் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி டிசம்பர் 5ம் தேதி புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை காரணமாக நேற்று முன் தினம் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, அரசுப் பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதன் காரணமாக இன்று ஒரு நாள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

holiday to tamilnadu government schools


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->