எய்ட்ஸ் நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி ?
எய்ட்ஸ் நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள், அறிகுறிகள்..!
இன்று உலக எய்ட்ஸ் தினமாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய், நோய் ஒருமுறை வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது. இதுவரை எந்த மருந்தும் இதற்கு கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும்.
எய்ட்ஸ் - விளக்கம்:
A : Acquired – ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது
I : Immune – உடலின் எதிர்ப்பு சக்தி
D : Deficiency – குறைத்துவிடுதல்
S : Syndrome – பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு
எச்.ஐ.வி என்னும் வைரஸால் தான் எய்ட்ஸ் வருகிறது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது.
எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்:
ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் காய்ச்சல், உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி, ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவும், இந்த நோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.
எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது?
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வதால் நோய் தொற்றுகிறது.
எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து, ஊசி குழல் போன்றவற்றை இன்னொருவர் பயன்படுவதன் மூலம் எய்ட்ஸ் வேகமாக பரவுகிறது.
குறிப்பாக ரத்தத்தின் மூலம் வேகமாக பரவுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு மேற்கொள்ள வேண்டும்.
எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?
1. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டும்.
2. தகாத உடலுறவு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியை இன்னொருவருக்கு பயன்படுத்த கூடாது.
4. இரத்த தானம் வழங்குவதிலும், பெறுவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
English Summary
HIV Problem . How to Find HIV