இவர் யார் என்று தெரிகிறதா..? தமிழனின் பெருமையை அமெரிக்காவில் நிலைநாட்டியவர்..! இவ்வளவு திறமை இருந்தும், இவர் பெயர் ஏன் இதில் இடம்பெறவில்லை..?
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் ஈமெயில் கண்டுபிடித்து ஒரு தமிழன் என்று.. ஆம் சிவா அய்யாதுரை தான் ஈமெயிலை கண்டுபிடித்தவர்
ஆனாலும், மாடர்ன் கம்ப்யூட்டர் சயின்ஸ் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனையான ஒன்று.
ஏன் நம்மவர்களில் பாதி பேருக்கு இவரை தெரிவதில்லை என்பது வேதனையிலும் வேதனை. உலகம் வியந்த தமிழர்களில் திரு சிவா அய்யதுரையும் ஒருவர், அவருக்கு ஒரு வணக்கத்துடன் இந்த பதிவு
சிவா அய்யாதுரை அவர்கள் இந்தியாவில் பாம்பேவில் பிறந்த தமிழர். ஏழு வயதிலேயே இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.

நியூ ஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் மேல்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவர் மின்னஞ்சல் இயக்கம் குறித்து நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்திற்காக பணியாற்றினார்
சிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக உன்னிப்பாக உள்வாங்கி கவனிக்கும் திறன் கொண்ட சிவா அய்யாதுரை அவர்கள் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராப்ட், ஃபோல்டர், அட்ரஸ் புக் அடங்கிய அடங்கிய மின்னஞ்சல் இயக்கத்தை தனது 14 வது வயதில் கண்டுபிடித்தார்.
50,000 வரிகள் அடங்கிய கோடுகள் கொண்டு ஒரு கம்பியூட்டர் ப்ரோக்ராம் உருவாக்கினார் சிவா அய்யாதுரை.
இது எலக்ட்ரானிக் முறையில் இன்டர்ஆபீஸ மின்னஞ்சல் இயக்கத்தை எதிரொலிக்கும் வகையில் அம்சங்கள் கொண்டிருந்தது.
சிவா அய்யாதுரையை ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்து பாராட்டியது.
ஆனாலும், மாடர்ன் கம்ப்யூட்டர் சயின்ஸ் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனையான ஒன்று.
English Summary
history of siva aiyathurai