ஆ.ராசாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூபாய் 1 கோடி பரிசு - அறிவிப்பு விடுத்தவர் கைது..!   - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், முகநூலில், திமுக எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ருபாய் 1 கோடி பரிசளிக்கப்படும் என்று பதிவிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டி இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்தவர் கண்ணன்.

இவர் தனது முகநூலில், "திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது நாக்கை அறுத்து கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கணூர் போலீசார் கண்ணனை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu People's Revolutionary Army member arrest


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal