நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!!! இலவச பேருந்து யார் கேட்டது...? – எடப்பாடி அறிவிப்பை சீமான் கேள்விக்குள்ளாக்கினார்...!
Who asked for free bus travel Seeman questioned Edappadi announcement
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை ரூ.2000 போன்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
“இலவச பேருந்து வேண்டும் என்று யார் உங்களிடம் கேட்டது?
முதலில் அரசுப் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கிறது?
தற்போதைய அரசு பேருந்துகளில் அரசியல் தலைவர்கள் பயணிப்பார்களா?
ஏற்கனவே கட்டணமின்றி பயணிக்கும் மகளிரை அவமானப்படுத்திய நிகழ்வுகள் நடந்துள்ளன.
இலவசங்கள் வேண்டாம்… எங்கள் தாய்மார்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கித் தருங்கள்” என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.இந்த விமர்சனம், இலவசத் திட்டங்கள் vs வேலைவாய்ப்பு அரசியல் என்ற விவாதத்தை மீண்டும் அரசியல் அரங்கில் தீவிரமாக்கியுள்ளது.
English Summary
Who asked for free bus travel Seeman questioned Edappadi announcement