லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஆப்பு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!
Highway dept officials arrested for taking bribe in Dharmapuri
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த குப்புசாமி என்பவர் நெடுஞ்சாலைத் துறையில் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற முயற்சித்து வந்த நிலையில் அதற்கு ஒப்புதல் வழங்க பாலக்கோடு நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரனை அணுகியுள்ளார்.

ஆனால் பாலக்கோடு நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இளநிலை உதவியாளர் தனபால் ஆகியோர் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சாலை பணியாளர் குப்புசாமி தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இளநிலை உதவியாளர் தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Highway dept officials arrested for taking bribe in Dharmapuri