அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட்: இனிமேல் உயர்கல்வி முன்பணம் உயர்வு..!
Higher education advance payment for children of government employees increased
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படவுள்ளது.
தமிழக அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர் கல்வியில் சேர்வதற்கான முன்பணத்தை அரசு வழங்கி வருகின்றது. அதில், தொழில்கல்வியில் சேர 50 ஆயிரம் ரூபாவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர ரூ.25 ஆயிரம் என கல்வி முன்பணம் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.
-pl9ls.png)
இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்தவகையில், இந்த ஆண்டு முதல் தொழில்கல்வியில் சேர ரூ.1 லட்சமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர ரூ.50 ஆயிரம் என கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்ட்டுள்ளார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
English Summary
Higher education advance payment for children of government employees increased