தேர்தலைப் போலவே பொதுத் தேர்வுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.! - Seithipunal
Seithipunal


தேர்தலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுமோ அதே அளவு முக்கியத்துவத்துடன் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை உதவி இயக்குனர்கள் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் தேர்தலுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நடத்தப்படும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High priority for public exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->