'கடும் குற்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நாளிலிருந்து நான்கு வாரங்களில் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்'; மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடும் குற்றங்களில் தொடர்புடையவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை நான்கு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் வினோத் என்பவர் குண்டர் சட்ட கைதியாக உள்ளார். அவர் தன் மீது குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது;

கடும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் ஜாமீனில் இருக்கும் போது நிபந்தனைகளை மீறினால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அதைச் செய்யாமல் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கடுமையான குற்றங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட நீதிமன்றங்களில், தாக்கல் செய்யப்படும் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை விசாரணைக்கு எடுத்து நோட்டீஸ் அனுப்பிய நாளிலிருந்து நான்கு வாரங்களில் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நீதிபதிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court bench orders legal decision on serious crimes within four weeks


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->