அரசியல் அநாகரிகத்தின் உச்சம்...! - நடிகை திரிஷா குறித்து ஆர்.பி. உதயகுமாரின் பேச்சால் கொந்தளிப்பு... மதுரையில் ஒட்டப்பட்ட காரசார போஸ்டர்கள்...!
height political indecency RP Udayakumar speech about actress Trisha causes uproar Insulting posters pasted Madurai
நடிகை திரிஷா குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் வார்த்தைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.அப்போது அவர், அ.தி.மு.க.வை விஜய் தலைமையிலான கட்சி கைப்பற்றவும், அதன் வளர்ச்சியை தடுக்கவும் முயற்சிப்பதாக விமர்சித்தார்.
மேலும், அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.அத்துடன் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேசும்போது, நடிகை திரிஷா குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, த.வெ.க. நிர்வாகி ஒருவர் ஆர்.பி.உதயகுமார் மீது காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில், இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்றும், “யாகாவா ராயினும் நாகாக்க” என்ற திருக்குறளுக்கு ஏற்ப வார்த்தைகளை கையாள்வது தமிழர்களின் பண்பாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், “முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, “எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தால் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் போஸ்டர்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த கண்டன போஸ்டர்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
English Summary
height political indecency RP Udayakumar speech about actress Trisha causes uproar Insulting posters pasted Madurai