#BigBreaking | நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை!
Heavy Rain school College Leave 11112022
மிக கனமழை எச்சரிக்கையால் நாளை செங்கல்பட்டு, நீலகிரி, அரியலூர், திருவாரூர் மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு காரணம் என்ன?
நேற்று வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி இந்த நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக மற்றும் கேரள பகுதிகளை இது கடந்து செல்ல கூடும்.


இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி கல்லூரிகளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy Rain school College Leave 11112022