"செங்கோட்டையன் பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்' - திமுக அமைச்சர் ரகுபதி பேட்டி!
dmk minister rahupathy say TVK Sengottaiyan BJP
சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தது குறித்து, கனிம வளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் செங்கோட்டையனை, பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்லாகவே" பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஸ்லீப்பர் செல் குற்றச்சாட்டு
செங்கோட்டையனின் த.வெ.க. இணைவு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
"என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனைப் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாகப் பார்க்கிறேன். அவர் இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர்."
அவர் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான், தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர் பாபு நட்பு ரீதியில் அழைத்தபோதும் அவர் வரவில்லை.
அசைன்மென்ட்: "செங்கோட்டையன் த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டுவர முடியும். அவர் அதற்கான அசைன்மென்ட்டில்தான் அனுப்பப்பட்டிருப்பார் என்பதே எங்கள் கருத்து. இது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம்."
மேலும், கட்சியை விட்டு ஒரு தலைவர் வெளியேறும்போது மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
dmk minister rahupathy say TVK Sengottaiyan BJP