லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா ஹீரோயினாக அறிமுகம் – “குப்பைக் கதை ஜெயித்த வரலாறே இல்லை!” - லிவிங்ஸ்டன் பேச்சு!
Livingston daughter Jovita debuts as a heroine
தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். கே.எஸ். கிஷான் இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று சென்னைையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு “பாடிகார்டாகத்தான் வந்தேன்” என்று நகைச்சுவை கலந்த பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்தார் லிவிங்ஸ்டன்.
பூஜை நிகழ்ச்சியில் பேசிய லிவிங்ஸ்டன், தற்போது சிறுபட்ஜெட் படங்களை மக்கள் மதிப்பதில்லை என்றாலும், “குப்பைக் கதை ஜெயித்த வரலாறே இல்லை. நல்ல கதைகள் ஒருபோதும் தோற்காது” என்று உறுதியாக கூறினார். தனது மகளுக்கு நல்ல கதை சொல்லப்பட்டதால் தான் இந்த படம் குறித்து நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜோவிதா பேசும் போது, “அப்பா வேண்டா வெறுப்பாகவே வந்திருக்கிறார்” என்று சிரித்தபடி கூறினார். அதற்கு பதிலளித்த லிவிங்ஸ்டன், “அப்படியில்லை… இந்த வயதிலேயே வெற்றி–தோல்விகளை சமாளிக்கும் மனவலிமை இருக்கும் என்கிற பயம்தான். ஆனாலும் என் மகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
சீரியல் மூலம் நடிப்புலகம் வந்த ஜோவிதா, இதுவரை ‘குற்றம் கடிதல் 2’ மற்றும் மற்றொரு பெயரிடாத படங்களில் நடித்துள்ளார். இப்போது முழுநீள ஹீரோயினாக அறிமுகமாகும் அவருக்கு சினிமா ரசிகர்கள், தொழில்துறை நிபுணர்கள் அனைவரிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
English Summary
Livingston daughter Jovita debuts as a heroine