“இந்தியா இங்கிலாந்தில் போய் டெஸ்ட் விளையாடட்டும்… சொந்த மண்ணில் எப்படி விளையாடுவது என்று மறந்துவிட்டார்கள்!” – ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்
Let India go and play Tests in England They have forgotten how to play on home soil Srikkanth harshly criticizes
இந்தியா–தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில், 25 ஆண்டுகள் கழித்து இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. 2012 முதல் ஒரு தொடர் கூட தோற்காமல் சாதனை படைத்த இந்திய அணி, கடந்த ஆண்டு நியூசிலாந்து எதிராக ஒயிட்வாஸ் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தபோதுதான், தென்னாப்பிரிக்காவிடம் தொடரையும் இழந்துள்ளது. தொடர்ச்சியான தோல்விகள் ரசிகர்களைவே திணற வைத்துள்ளன.
இந்திய அணியின் இத்தகைய மோசமான ஆட்டத்தை முன்னாள் கேப்டன் கிரிஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘‘இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய அணி மறந்துவிட்டது போல இருக்கிறது’’ என்று அவர் வேதனையுடன் கூறியதோடு, ‘‘அப்படியானால், இங்கிலாந்திலேயே அனைத்துப் போட்டிகளையும் விளையாடிவிட்டு, நேரம் கிடைக்கும் போது வழக்கம்போல தெருக்களைச் சுற்றிப் பாருங்கள்’’ என கிண்டலாக கண்டித்துள்ளார்.
சமீபத்தில் “சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பையை வென்றும் மக்கள் விமர்சிக்கிறார்கள்” என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த், இந்தத் தோல்விக்கு காரணமான தவறான தேர்வுகள் மற்றும் மாற்றங்களை கம்பீர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
‘‘வேகப்பந்துக்கு ஏற்ற பிட்ச்களில் விளையாடி பழகிய நீங்கள், ஸ்பின் பிட்ச்களில் சிக்கிக் கொள்கிறீர்கள்.’’‘‘கௌகாத்தி பிட்ச் நன்றாக இருந்தது. அதில் குறை எதுவும் இல்லை. ஆனால் இந்திய பேட்ஸ்மன்களால் மணிக்கணக்கில் ஆட முடியவில்லை.’’
‘இந்திய அணி இங்கிலாந்தில் தங்களுக்கான ரசிகர்களைத் தேடி விளையாடட்டும்; ஆனால் இந்தியாவில் தொடர்களை தொடர்ந்து இழப்பதை ரசிகர்கள் மன்னிக்கப் போவதில்லை.தோல்வியை ஏற்றுக்கொண்டு, சிஸ்டத்தில் உள்ள குறைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்.வெற்றி முடியாவிட்டாலும், ஒரு போட்டியை டிரா செய்ய முடியாத நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
இந்திய அணியின் டெஸ்ட் ஆட்டத்தில் ஏற்பட்ட இந்த மந்தநிலை குறித்து கிரிக்கெட் உலகமே கவலைப்படுகின்ற நிலையில், ஸ்ரீகாந்தின் வெட்கத்துக்கு உரிய விமர்சனங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Let India go and play Tests in England They have forgotten how to play on home soil Srikkanth harshly criticizes