“விஜயால் டெபாசிட் கூட வாங்க முடியாது!” – ஒரே போடாக போட்டு பொளந்த இயக்குநர் ராஜகுமாரன்
Vijay canot even take a deposit Director Rajakumaran who was fired in one fell swoop
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வேகமாக முன்னேறி வரும் சூழலில், இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தெரிவித்த கூச்சலான கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அவர், விஜயின் அரசியல் பயணத்தை நேரடியாக விமர்சித்துள்ளார்.
“அரசியல் என்பது தியாகத்தின் மேல் நிற்கும். ஆனால் விஜய் கடந்த 30 ஆண்டுகளில் மக்களிடம் வேடிக்கை காட்டிக் கொண்டே இருந்தார். இன்று வந்து ‘மக்களுக்கு சேவை செய்ய வருகிறேன்’ என்றால், மக்கள் அவரை சிரித்தபடி பார்ப்பார்கள்,” என ராஜகுமாரன் கூறினார்.
விஜய் தனித்த பாதையைத் தேர்வு செய்து போராடுவதால் வெற்றி பெற முடியாது என்றும், “திமுக–அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளைக் கடந்தால் யாராலும் வர முடியாது. விஜய் தனியாக நிற்கிறார்… அவரால் டெபாசிட் கூட எடுக்க முடியாது,” என்று நேரடியாக தாக்கினார்.
அவர் மேலும், “விஜய் படப்பிடிப்பு தளத்தில் கூட பேச மாட்டார். அப்படி இருப்பவர் மக்கள் நடுவே மக்களாக இருப்பது எப்படி சாத்தியம்? அரசியலில் வெயிலில் கருகவும், மழையில் நனைவதும், கூட்டத்தில் அடிபடுவதும் இயல்பு. அதை சிறு வயதில் இருந்தே அனுபவித்தவர்கள் மட்டுமே அரசியலில் நிலைப்பார்கள். விஜய் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்தவர்,” என தெரிவித்தார்.
அரசியலில் ‘காப்பாளர் வருவார்’ என்ற மாயை இல்லை என்றும், முதலமைச்சராகினாலே மக்கள் நலன் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தவறு என்றும் ராஜகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
English Summary
Vijay canot even take a deposit Director Rajakumaran who was fired in one fell swoop