இந்தியப் பெருங்கடலில் 6.4 ரிக்டர் வரை மூன்று தொடர் நிலநடுக்கம் — மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!
Three series of earthquakes up to 6 magnitude in the Indian Ocean a sign of the threatening 2004 tsunami
இந்தியப் பெருங்கடலில் இன்று ஒரே நாளில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டதால் கரையோரப் பகுதிகளில் அச்சம் நிலவுகிறது. அதிகாலை தொடங்கி 6.4, 5.3 மற்றும் 4.8 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இந்த அதிர்வுகள் அனைத்தும் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளன. ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் மேற்பரப்பை அதிக வலுவாக அதிர்விக்க செய்வதால் எச்சரிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அதிர்வுகளின் மையப்பகுதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடல்பகுதியானதால், 2004ஆம் ஆண்டின் பேரழிவு சுனாமியை நினைவூட்டும் வகையில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அதிர்வுதான் பெரும் சுனாமியை உருவாக்கி 14 நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டது.
மீண்டும் தொடர்ச்சியாக அதிர்வுகள் ஏற்பட்டாலும், இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்தியப் பெருங்கடல் சுற்றுப்புற நாடுகள் நிலைமையை கவனமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Three series of earthquakes up to 6 magnitude in the Indian Ocean a sign of the threatening 2004 tsunami