#தமிழகம் | மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர் அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பகல் நேர வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால் குடை அல்லது உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heating Wave TNGovt Advise For people


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->