தென்காசியில் நேருக்கு நேர் பேருந்து மோதல்...! 6 பேர் பலி, 40 பேர் உயிர் பிழைக்கப் போராட்டம்...!
Head on bus collision in Tenkasi 6 people killed 40 people fighting survival
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை உயிரைக் குலுக்கிய துயர விபத்து ஒன்று நிகழ்ந்தது. இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் பலமாக சிதறிக் கிடந்தனர். இந்த பயங்கர மோதலில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சிறுவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் துடித்தனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதற்கட்ட தகவல்படி, தனியார் பேருந்துகள் போட்டி போட்டு வேகமாக சென்றதே இந்த விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதி முழுவதும் பரிதாப காட்சிகள் நிலவுகின்றன.
தற்போது மீட்பு மற்றும் மோதல் காரணம் தொடர்பான விசாரணை போலீசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Head on bus collision in Tenkasi 6 people killed 40 people fighting survival