முதல்வர் வேட்பாளர் அவர்தான்..நயினார் நாகேந்திரன் மீண்டும் உறுதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும் எனவும், அதில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,“தமிழகத்தில் NDA அரசு உருவாகும்; அதில் பாஜகவுக்கும் பங்கு இருக்கும்” என தெரிவித்துள்ளார்.மேலும், “முதல்வர் அ.தி.மு.க.விலிருந்து வருவார்” எனவும் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதுபற்றி, “அது அவர்களது கட்சிக் கடமை, நான் தலையிட மாட்டேன்” என்றும் கூறினார்.பா.ஜ.க வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமித்ஷாவின் பேட்டிக்குப் பின்னர், நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்:“2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்.பா.ஜ.க – அதிமுக கூட்டணியை பிளவுபடுத்த முடியாது.இதைச் சொல்லி திமுக பயத்தில் பரபரப்பாக பேசி வருகிறது.கூட்டணியின் தலைமைக் முடிவுகள் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே எடுத்துக் கொள்ளப்படும்.”

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணையுமா? என்ற கேள்விக்கு, நாகேந்திரன் சிரித்தபடி,“நல்லதே நடக்கும்...”என இரகசியமான முறையில் பதில் அளித்தார்.இந்தப் பேச்சுவார்த்தைகள், தமிழக அரசியல் சூழ்நிலையில், 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He is the chief minister candidate Nayanar Nagendran confirms again


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->