தமிழக அரசியல் கட்சி தொண்டர்களே கவனத்திற்கு | உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி - சிக்கிய 1050 வாகனங்கள்!  - Seithipunal
Seithipunal


வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்கள் ஓட்டுவதை எப்படி அனுமதிக்கின்றனர் என்று, தமிழக அரசுக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.

கரூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரின் அந்த மனுவில், வாகனங்களின் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த வாகன எண் பலகை பலகை வைப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை மோட்டார் வாகன சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இதனை மீறும் விதமாக கரூர் மாவட்டத்தின் உள்ள பல வாகனங்களில், அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய எண் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 

இது பல சட்டவிரோத செயல்களுக்கு வழி இருக்கிறது. இது குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "வாகன எண் பலகையில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் ஓட்டுவதை மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர். இது விதிமிரல் இல்லையா? தினந்தோறும் மண்டல போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து, விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நம்பர் ப்ளேட்களில் தலைவர்கள், நடிகர்கள் படங்கள் இடம்பெற கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், மதுரையில் விதிமீறிய 1,050 வாகனங்களுக்கு ஒரே நாளில் 7 லடசம் ரூபாய் வரை அபராதம் போலீசார் விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HC Order Number plate Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->