விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்! நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது..என்று கூறிய பாஜக எம்.பி. - கனிமொழி கண்டனம் - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர்.

ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாகூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” எனக் கூறினார். மேலும், மாணவர்களை நோக்கி,

"நாம் இன்றும் பாடப்புத்தகங்களில் காண்பதையே உண்மையாக ஏற்று வாழ்கிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் பாரம்பரியம், நம் கலாசாரம், நம் அறிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஆங்கிலேயர்கள் கற்றுக்கொடுத்த கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதற்கு அப்பால் சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்படிச் சிந்தித்தால் நம்முடைய வரலாற்றில் இன்னும் நிறைய உண்மைகள் தெரியும்” என கூறினார்.

இதையடுத்து, மாணவர்களின் முன்னிலையில் அனுராக் தாகூர் தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ஆம் ஆண்டு நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால் அதனை மறந்து, “முதலில் விண்வெளிக்கு சென்றவர் அனுமன்” என்ற அனுராக் தாகூரின் கூற்றுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து டி.எம்.கா. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:"நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களுக்கு ‘நிலவில் முதலில் கால் வைத்தவர் அனுமன்’ என்று கூறுவது மிகுந்த கவலையளிக்கிறது. அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளான அறிவு, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம் உண்மையை கட்டுக்கதையுடன் கலப்பதில் இல்லை. மாறாக, உண்மையை உண்மையாகவே கற்றுக் கொடுத்து, மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான தவறான செய்தியை குழந்தைகளிடம் பரப்பியதாகக் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hanuman was the first person to go into space Not Neil Armstrong says BJP MP Kanimozhi condemns


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->