கைத்தறி நெசவு தொழிலாளர்கள் 20 ஆம் தேதி வேலை நிறுத்தம்!  - Seithipunal
Seithipunal


நலிந்து வரும் கைத்தறி தொழிலை -தொழிலாளர்களை பாதுகாத்திட கோரி குமரிமாவட்ட ஐக்கிய கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் தொழிளாளர்கள் மே 20 ஆம் தேதி அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே 20 ஆம் தேதி நலிந்து வரும் கைத்தறி தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து 

அதன் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் லட்சுமி, பொருளாளர் கலா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கன்னியாகுமரிமாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் . 

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-ஒன்றிய அரசின் தொழிற்சங்க தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து 2025 மே 20-ல் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. எனவேநலிந்து வரும் கைத்தறி தொழிலை -தொழிலாளர்களை பாதுகாத்திட கோரி குமரிமாவட்ட ஐக்கிய கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் தொழிளாளர்கள் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  சிஐடியு சார்பாக மாவட்ட செயலாளர் தங்க மோகன் , மாணிக்கவாசகம்,   மீனாட்சிசுந்தரம்,ஏ ஐசிசி டியு மாநில தலைவர் எஸ்.எம்  அந்தோணி முத்து,  ஹச்எம்எஸ் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன், எல்பி எப் சார்பாக ஞானதாஸ், ஐஎன்டியுசி நகர தலைவர் மகாலிங்கம் , மரிய ஜெயசிங் இராதாகிருஷ்ணன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Handloom weavers strike on the 20th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->