புலம்பும் குட்கா, பான் மசாலா பிரியர்கள்...! மேலும் ஓராண்டுக்கு தடை நீடிப்பு...!
Gutka and pan masala lovers are complaining Ban extended for another year
தமிழ்நாடு அரசு,புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் அமல்படுத்தியது.

இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் வருகிற 2026ம் ஆண்டு மே 23 வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
English Summary
Gutka and pan masala lovers are complaining Ban extended for another year