யாருடா நீங்க! மீண்டும் ஏர் இந்தியா விமானம் மீது பச்சை லேசர் ஒளி...! தீவிர விசாரணையில் போலீஸ்...!
Green laser light on Air India plane again Police under intensive investigation
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானத்தின் மீது மீண்டும் லேசர் லைட் அடித்தது பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.இது புனேவிலிருந்து தரையிறங்கிய 'ஏர் இந்தியா' விமானம் மீது மர்ம நபர்களால் லேசர் ஒளி அடிக்கப்பட்டது.

இதுகுறித்து விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை சேதாரமின்றி பத்திரமாக தரையிறக்கினர்.மேலும் இது கிண்டி பகுதியிலிருந்து சக்திவாய்ந்த லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய காவலர்கள் பரங்கிமலை, கிண்டி காவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.மேலும், சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட 3வது சம்பவம் இது ஆகும்.
இது தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Green laser light on Air India plane again Police under intensive investigation