உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும் நிம்மதி...! வழக்கு பதியக் கோரிய மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...!
great relief Udhayanidhi Stalin Supreme Court has abruptly dismissed petition seeking registration case
சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும், ‘சனாதனத்தை கொசுவைப் போல ஒழிக்க வேண்டும்’ என உதயநிதி ஸ்டாலின், ஆ. ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேசியதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய மனுக்கள் இந்திய உச்சநீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றங்களை வரையறுப்பதும், அதற்கான சட்டங்களை உருவாக்குவதும் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படும் சட்டங்களுக்கு உரிய விளக்கத்தை வழங்குவது நீதிமன்றங்களின் கடமையாகும்; ஆனால் புதிய சட்டங்களை உருவாக்குமாறு வற்புறுத்துவது நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சமூக மாற்றங்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு, வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த தேவையான சட்டப்பிரிவுகளை மத்திய அரசு கொண்டு வரலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டு, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
English Summary
great relief Udhayanidhi Stalin Supreme Court has abruptly dismissed petition seeking registration case