நெருங்கும் பிளஸ்-2 தேர்வு: தயாரான 2 வகை வினாத்தாள்... பக்கா பிளான் போட்ட தேர்வு துறை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளதால் தேர்வில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்வு துறை அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. 

குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக இருக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான தேர்வு தாள்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏ, பி என தயாரிக்கப்பட்டுள்ள 2 வகையான வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் வெவ்வேறு கேள்விகளின் வரிசையில் இடம்பெற்றிருக்கும். 

இதனால் மாணவர்கள் அருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது. இது குறித்து தேர்வு துறை அதிகாரி தெரிவித்திருப்பதாவது, 

இந்தமுறை கடந்த 15 வருடத்திற்கு முன்பே செயல்பட்டு வருகிறது. ஏ, பி, சி, டி என 4 வகை வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 வகை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் காப்பியடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt organized plus 2 exam 2 type question paper


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->