தற்காலிக ஓட்டுநரால் அலறிய பயணிகள்.. "சேற்றில் சிக்கி " அரசு நகர பேருந்து விபத்து.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிற் சங்கத்தினர்  போராட்டத்தை அறிவித்த நிலையில் நேற்று தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஓட்டுனரால் நெல்லையிலிருந்து ராஜவல்லிபுரம் பாலாமடைக்கு இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து சேற்றில் சிக்கியதால் பொய்த்துமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் மாநகரத்துக்கு வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு யாரும் காயம் ஏற்படாமல் தப்பியுள்ளனர். தற்காலிக பேருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt city bus stuck in mud by temporary driver in nellai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->