அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்! காரணம் என்ன?
Govt bus drivers conductors suddenly strike
திருநெல்வேலி, வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சுமார் 45 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கப்படுவதாகவும் வார ஓய்வையும் நிர்வாகம் வழங்குவதில்லை என அடிக்கடி புகார் எழுகிறது.
மேலும் வள்ளியூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள், ஓட்டுநர்கள்-நடத்துனர்கள் வேறு வழித்தடங்களில் செல்ல மாட்டேன் என தெரிவித்தால் எந்த வித விசாரணையும் இன்றி தற்காலிக பணநீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்வதாக புகார் வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து இன்று அதிகாலை போக்குவரத்து பணிமனையில் 100கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை தொடங்கிய இந்த போராட்டத்தில் தொழில்நுட்ப பணியாளர்கள், ஓட்டுநர்கள்-நடத்துனர்கள் பங்கேற்றனர். இதனால் உடனடியாக, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மண்டல வணிக மேலாளர், தொழில்நுட்ப துணை மேலாளர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பிறகு போராட்டம் ம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் காரணமாக 3 மணி நேரம் 40 பேருந்துகள் இயக்காததால் காலையில் பணிக்குச் செல்லும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அவதி அடைந்தனர்.
English Summary
Govt bus drivers conductors suddenly strike